இந்தியா முழுவதும் பா.ஜ.,விற்கு செல்வாக்கு: மோடி பெருமிதம்

இந்தியா முழுவதும் பா.ஜ.,விற்கு செல்வாக்கு: மோடி பெருமிதம்

புதுடில்லி: 'கர்நாடக தேர்தல் வெற்றி, இந்தியா முழுவதும் பா.ஜ.,வுக்கு செல்வாக்கு உள்ளதை உணர்த்துகிறது' என பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.

காங்.,க்கு தோல்வி முகம்:
டில்லியிலுள்ள பா.ஜ., தலைமையகத்தில் பா.ஜ., பார்லி., குழு கூட்டம் நடந்தது. அதில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா பேசியதாவது: இப்போது வரை கர்நாடகாவில் காங்., வெற்றி பெற்றுவிட்டதாக நினைக்கிறது. பிரித்தாளும் கொள்கையை கடைபிடித்த காங்., கட்சிக்கு அங்கு தோல்வியே மிஞ்சியது. காங்., முதல்வர் தனது தொகுதியில் படுதோல்வியடைந்துள்ளார். 

மோடியே காரணம்:
எப்படியும் வெற்றி பெற்று விட வேண்டும் என்ற நோக்கில் கள்ள ஓட்டு போடவும் காங்., தயாராக இருந்தது. காங்., தலைவர்களின் வீடுகளில் ஆயிரக்கணக்கான போலி வாக்காளர் அடையாள அட்டைகள் கைபற்றப்பட்டன. இருப்பினும் கர்நாடக மக்கள் பா.ஜ.,வை வெற்றி பெற வைத்துள்ளனர். இதற்கு முழு காரணம் பிரதமர் மோடியே. 2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

மகிழ்ச்சியும்.. கவலையும்.. :
பிரதமர் மோடி பேசியதாவது: கர்நாடக தேர்தலில் பா.ஜ.,வின் வெற்றிக்கு உழைத்த கட்சி தொண்டர்களுக்கு நன்றி. தேர்தல் வெற்றிக்கு பாடுபட்ட அமித்ஷாவுக்கு நன்றி. தேர்தலில் பெற்ற வெற்றி மகிழ்ச்சியளித்தாலும், வாரணாசியில் பாலம் இடிந்து விழுந்து 12 பேர் பலியான சம்பவம் கவலையளிக்கிறது. கர்நாடக வெற்றி சிலருக்கு சொல்வது என்னவென்றால், வட இந்தியா மட்டுமல்ல, இந்தியா முழுமையும் பா.ஜ.,வுக்கு செல்வாக்கு உள்ளது. 

ஹிந்தி கட்சி அல்ல:
காங்., கட்சி வட இந்தியா, தென் இந்தியா என பிரித்து பேசி வருகிறது. மொழி ஒரு பிரச்னையே இல்லை. கர்நாடக தேர்தல் வெற்றி உணர்த்துவது பா.ஜ., ஒரு ஹிந்தி கட்சி இல்லை என்பதைத்தான். கடின உழைப்பு என்றும் வெற்றி தேடித்தரும் என்பதை அமித்ஷா நிரூபித்துள்ளார். மேற்குவங்க உள்ளாட்சி தேர்தலில் நடந்த வன்முறை அங்கு ஜனநாயகம் செத்துவிட்டதை உணர்த்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

0 comments :

HOODLES

Gumbo beet greens corn soko endive gumbo gourd. Parsley shallot courgette tatsoi pea sprouts fava bean collard greens dandelion.

JACKETS & SUIT

Gumbo beet greens corn soko endive gumbo gourd. Parsley shallot courgette tatsoi pea sprouts fava bean collard greens dandelion.

SPORT SHOES

Gumbo beet greens corn soko endive gumbo gourd. Parsley shallot courgette tatsoi pea sprouts fava bean collard greens dandelion.

 
Created By SoraTemplates | Distributed By Gooyaabi Templates